2015 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தம்மை விளம்பரப்படுத்துவதற்காக போலியான பல முகப்புத்தகக் கணக்குகளை ஆரம்பித்து இயக்கி வருவதாக இணைய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
இந்த போலி கணக்குகள் நாளாந்தம் பலருக்கு நண்பர் அழைப்புக்களை விடுக்கின்றார்கள். இதனை ஆராய்ந்த போது அவற்றில் அதிகமானவை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
இந்த போலி கணக்குகள் மூலம் தமக்கு அதிகளவு ஆதரவுத் தளம் இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்கின்றார்கள். தம்மைத்தாமே புகழ்வதான இந்த பிரச்சார உத்தி முறையில் காணப்படுகின்ற நேர்மை இன்மை காரணமாக இவை வாக்குகளாக மாற்றப்படுவதற்கான வய்ப்புக்கள் இல்லையென்ற நிலைமையே காணப்படுகின்றது.
இந்த பிரச்சாரங்களில் தமிழ்தேசியம் சார்பு தீவிர கோஷங்களை முன்வைக்கின்ற கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
0 comments:
Post a Comment