தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமான அரசியற் இயக்கமாக இயங்கவேண்டுமாயின் கூட்டமைப்பை ஒரு அரசியற் கட்சியாக பதிவு செய்ய வரும் நாட்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஐயாவிடம் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்" என வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளாராக போட்டியிடும் திரு.கந்தையா சிவநேசன் (பவன்) திங்கட்கிழமை (10/08) அன்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் ஓர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று அமைப்புக்களாக புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு சம்பந்தமாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன.
கூட்டமைப்பின் பதிவு சம்பந்தமான இவ் அமைப்புக்களின் நிலைப்பாட்டினை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அநேகமான அமைப்புக்களும், அரசியல் ஆரவலர்களும் வரவேற்று அவதானித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment