கருணா என்றாலே அது காட்டிக் கொடுப்பை அடையாளப் படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. தமிழர்கள் வரலாற்றில் இந்த கருணா என்ற பெயரை , யாரும் தமது குழந்தைகளுக்கு வைப்பது இல்லை. அதுபோக தமிழகத்தில் இந்தப் பெயரோடு ஏற்கனவே இருந்த நபர்கள் கூட தற்போது , தமது பெயரை மாற்றி வேறு பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.
இன் நிலையில் கருணா ஒரு அறிவித்தலை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்கு போடவேண்டும் என்று. தாம் அதனை தீவிரமாக ஆதரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை எங்கே போய் சொல்ல ? இவர்களுக்கு இடையே கடந்த காலங்களில் எது மாதிரியான கள்ளத் தொடர்புகள் இருந்து வந்துள்ளது என்று தெரியவில்லை என்கிறார்கள் யாழில் உள்ள மக்கள்.
இம் முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் பல ஆசனங்களை இழக்க நேடும் என்று யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருகோணமலையில் சில வேளை சம்பந்தரே தனது நாற்காலியை இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. 17 வரை பொறுத்திருந்து தான் பார்க வேண்டும்.
new jaffna
0 comments:
Post a Comment