மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரஸ்லின் (கெங்கா) என்பவர் மிகுந்த வறுமை காரணமாக மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளியான இவர், ஐந்தாம் வட்டாரம், இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவராவார்.
மிகுந்த வறுமையில் இருந்த இவருக்கு மூளையில் கட்டி
ஏற்பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் வைத்தியம் செய்வதற்கான பணம் கிடைக்காததால் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கூட்டமைப்பின் மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரிடம் உதவி கேட்டு எந்தவித பிரயோசனமும் இல்லாது இவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகத் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரியவருகின்றது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரும், நீதவானும் சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
newjaffna
0 comments:
Post a Comment