வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வசித்துவந்த செல்வகுமார் செல்வரூபன் 15வயதுடைய பாடசாலை மாணவனை கடந்த 06.07.2015 முதல் காணவில்லை என தாயின் சகோதரி 09.07.2015 அன்று ஓமந்தை காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் தாயின் சகோதரியுடன் வசித்த வந்த 15வயதுடைய ஓமந்தை மத்திய கல்லூரியில் தரம் 7ல் கல்வி பயிலும் மாணவனே கடந்த மாதத்திலிருந்து காணாமற்போயுள்ளதாக ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவனின் தாயார் பணிப்பெண்னாக குவைத் நாட்டில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிகின்றார். தந்தையின்றி வாழ்ந்து வந்துள்ளதால் தாயின் சகோதரியும் பல சிரமத்தின் மத்தியில் பாதுகாத்து வந்துள்ளார். சம்பவதினம் பாடசாலை சென்று விட்டு பிற்பகல் வீடு வந்துவிட்டு விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. என சிறுவனின் சிறிய தாய் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் சகோதரி செட்டிகுளம் திருக்கன்னியார் மடத்திலிருந்து கல்வி பயின்று வருகின்றார். காணமற்போன சிறுவனும் சில மாதங்களுக்கு முன்னர் செட்டிகுளம் அருட்தந்தையர்களின் பாதுகாப்பில் இருந்துள்ளார். அருட்தந்தையாருடன் ஏற்பட்ட கருத்துவேறு பாடு காரணமாகவே ஓமந்தையிலிருக்கும் சிறிய தாயுடன் வசித்து வந்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிசார்; விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புகளுக்கு
0770503111
0771172750
0 comments:
Post a Comment