சமீபத்தில் நடந்த தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து பெற்ற நிதி சேகரிப்பு தொடர்பாகவும், அதற்கான கணக்குகள் காட்டப்படாததினால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவுக்கு சென்று நிதி சேகரிக்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையை முன் வைத்தபோதே, இந்த தகவல் வெளிவந்துள்ளது.
வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்தியலிங்கம் இது பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் உள்ள தம் உறவுகளுக்கு அங்கு சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்ற நோக்குடன் பெருமளவு பணத்தினை கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார்கள்.
திரு. சுமந்திரன் அவர்கள் அடிக்கடி வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் செய்து இந்த பணங்களை வசூலித்தார் .
திரு. சுமந்திரன் அவர்கள் இந்த பணங்களுக்கு இன்றுவரை கணக்கு காட்டவில்லை. மக்களிடம் நன்கொடையாக பெற்ற பணத்திற்கு கணக்கு காட்டுவதில் பிரச்சனை ஏதும் இல்லையென்றால் ஏன் இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை. ஏன் சுமந்திரன் கணக்குகள் காட்டத் தயங்குகின்றார் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
எவ்வளவு பணம் அறவிடப்பட்டது, எவருக்காவது கமிஷன் வழங்கப்பட்டதா என்றும், வசூலிக்கப்பட்ட பணம் எல்லாம் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு சமமாக பகிர்ந்து கொடுக்கப்பட்டதா என்பது பற்றிய விபரங்களை தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் இந்த தமிழ் அமைப்பு கோறியுள்ளது.
இப்பணம் தமிழரின் பணமேயன்றி தனி நபருக்கு சொந்தமானதல்ல. இப்பணம் புலம்பெயர் தமிழர்கள் தம் உறவுகளுக்கு வழங்கப்பட்ட பணமேயன்றி சுமந்திரன் என்னும் தனி மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், புலம்பெயர் தமிழர்கள் தவிர, வேறு எவரிடம் இருந்தும், குறிப்பாக, தமிழர் விரோத சக்திகளிடமிருந்தோ, சிங்கள கட்சிகளிடமிருந்தோ இருந்தும் பணம் பெற்றுக் கொள்ளபட்டதா என்பதையும் வெளிப்படையாக, ஒழிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Thanks tamil news net
0 comments:
Post a Comment