2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்றும் முன் நிறைவடைந்தது.
அதன்படி, 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் மேலதிக 109 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பின் போது வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் 51 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டது. அதேவேளை 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானாந்தா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம். கே .டி. எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார உட்பட 13 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
0 comments:
Post a Comment