சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரான்ஸ் மக்களின் நிதியுதவியுடன் விசேட தேவைக்குட்பட்டவர்களின் அமையமான 'இணையும் கரங்கள்' அமைப்பின் ஊடாக 350 பயனாளிகளுக்கு 06.12.2015 உடைகள் வழங்கப்பட்டன.
பிரான்ஸ் மக்களின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் ஒழுங்கமைப்பில் ஜேர்மனியை சேர்ந்த கந்தசாமி மனோ காந்தன், ஆர்.பசுபதி, பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள் நிதியுதவி வழங்கியிருந்தனர்.
இணையும் கரங்கள் அமைப்பின் தலைவர் வீரசிங்கம் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நெடுங்கேணி வடக்கு பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் தணிகாசலம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment