வவுனியா பாவற்குளம் படிவம் 01 இல் போக்குவரத்து பாதைகள் கூட இல்லாது பற்றை காட்டுக்குள் வீட்டு திட்டம் கிடைத்து அரைகுறையாக கட்டிய வீட்டிலும் ,கொட்டிலும் வசிக்கும் 4 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டு தமிழ் விருட்சத்திடம் சமூக சேவகி கமலாதேவி மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கனடாவில் வசிக்கும் வர்மனின் நிதி உதவியுடன் அரிசி ,மா ,சீனி ,டின் மீன் ,கிழங்கு ,பருப்பு என ஒரு மாத உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன .
படிவம் 01 இல் வசிக்கும்இரு பிள்ளைகள் உள்ள மாயழகு ,கிருஸ்ணகாந்தி குடும்பத்துக்கும் ,
ஒரு பிள்ளையுள்ள சங்கரதாஸ் ,சுதர்சினி குடும்பத்துக்கும் ,
2 பிள்ளைகள் உள்ள சிவரூபன் ,சிந்துஜா குடும்பத்துக்கும் ,
4 பிள்ளைகளை கொண்ட உதயகுமார் ,மோகனேச்வரி குடும்பத்துக்கும் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன .
மிகுந்த சிரமபட்டு வாழும் இந்த குடும்பத்துக்கான உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),செயலாளர் மாணிக்கம் ஜெகன் சமூக சேவகி கமலாதேவி ,சமூகசேவகி பாக்கியம் ஆகியோர் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர் ,
அதில் கருத்து தெரிவித்த சிவரூபன் சிந்துஜா அவர்கள் இந்த அவல வாழ்வு வாழும் தங்களை பார்க்க யாரும் இதுவரை வரவில்லை எனவும் நீங்கள் எம்மை வந்து பார்த்து உணவு பொருட்களையும் வழங்கியதுக்கு வர்மனுக்கும் ,தமிழ் விருட்சத்துக்கும் நன்றிகள் பல என்றார்.
மேலும் எமக்கு பொது கிணறு ஓன்று கட்டி தர பட்டுள்ளது அதை பூசி மீண்டும் இறைத்து தர மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும் என்றும் தற்சமயம் குடி தண்ணீருக்கு 2 கிலோ மீட்டருக்கும் மேல் நடந்தே பெற்று வருவதாகவும் சொன்னார் .
0 comments:
Post a Comment