வவுனியாவில் நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீசன் மீது வர்த்தகரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் பொலிசாரால் கைது செய்யபட்டதை தொடந்து வவுனியாவின் முஸ்லிம் வர்தகர்கள் மற்றும் முஸ்லிம் அரச அதிகாரிகள் என பலர் தாக்கப்பட்ட ஊடகவியலாளருடன் சமரசபேச்சில் ஈடுபட்டுள்ளனர்
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகர்ப்பகுதியில் வர்த்தக நிலையமொன்று வீதியை ஆக்கிரமித்து கொட்டகையை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியா நகரசபையினர் இக் கொட்டகையை அகற்றுமாறு கோரியபோதிலும் கொட்டகை அகற்றப்படாத நிலையில், இன்று (வியாழக்கிழமை) வவுனியா நகரசபையினரால் கொட்டகை அகற்றப்பட்டது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செய்தியாளர்கள் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது வர்த்தக நிலையத்தில் இருந்த வருகை தந்த ஒருவர்இ ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவருடைய புகைப்பட கருவிக்கு சேதம் ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஏனைய ஊடகவியலாளர்கள் தலையிட்டு ஊடகவியலாளரை மீட்டதுடன் வவுனியா பொது வைத்தியசாலையிலும் அவரை அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் ஊடகவியலாளர் அணிந்திருந்த சங்கிலியொன்றும் குறித்த அசம்பாவித்ததில் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment