இன்று பகல் வ்வுனியா நகர்ப்பகுதியில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் மீது வர்த்தக நிலைய பணியாளர் ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. என சம்பவம் குறித்து சிறிரெலோ கட்சியால் வெளியிடபட்ட கண்டண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது
இத்தாக்குதல் நகர்ப்பகுதியில் நகரசபை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்,ஏராளமான பொதுமக்களுக்கும் முன்னிலையில் இடம்பெற்றுள்ளமை தாக்குதல் நடத்திய குறித்த நபரின் தான்தோன்றித்தனத்தினையும், அருகிவரும் சகிப்புத்தன்மையினையும் வெளிப்படுத்துகின்றது.
ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாடுகளை அச்சுறுத்தும் வகையான இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது ஊடகசுதந்திரத்தினை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் . என அவ் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
நன்றி.
ப.உதயராசா.
செயலாளர் நாயகம்.
சிறிரெலோ
0 comments:
Post a Comment