“சமத்துவம்” அற்ற கல்வி முறை ஒரு பாரிய மோசடி -கே கே மஸ்தான்





“சமத்துவம்” அற்ற கல்வி முறையை ஒரு பாரிய மோசடி அல்லது துரோகம் என்று கூட குறிப்பிடலாம்கொழும்பின் பிரபல பாடசாலைகளில் கிடைக்கப்படும் வளங்கள் எமது வெலிஓயா சிங்கள பாடசாலைசாலைக்கும், ஓமந்தை தமிழ் பாடசாலைக்கும், முசலி முஸ்லிம் பாடசாலைக்கும் கிடைக்கப் பெறும் வரை நாட்டில் பிரதேசரீதியான அபிவிருத்தி ஏற்றத்தாள்வுகளும், இனரீதியான வேறுபட்ட சிந்தனைப்பாங்கும் காணப்படுவது தவிர்க்க முடியாதது. என கே கே மஸ்தான் பாராளுமன்நத்தில் உரையாற்றும் குறிப்பிட்டார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 



வறுமை, தொழிலின்மை, வன்முறைகள், இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகள் மற்றும் முரண்பாடுகள் போன்ற அபிவிருத்தி சார் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வு கல்வியாகும். எனவே இந்த யதார்த்தத்தை நன்கு அறிந்து பணியாற்றவேண்டிய தேவை எமது தேசிய அரசாங்கத்துக்கு உள்ளது.
2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இளைஞர் ஆய்வின் படி, 23% மானோர் பாடசாலைக் கல்வி பயனற்றது எனக் கருதியதால்தாம் கல்வியை இடைநடுவே நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டனர். மாணவர்கள் மத்தியில் பொதுவாக உள்ள இவ்வகையான மனப்பாங்கு நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய தடங்களாகும்.  எனவே தொழில் வழிகாட்டளை மையமாகக்  கொண்டதாகவும், சமூகத்தில் நல்லொழுக்கம்மற்றும் மனித விழுமியங்களை மேம்படுத்துவதாக எமது கல்வி, உயர்கல்வி மற்றும் விளையாட்டுத்துத் துறை அபிவிருத்தி சார் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். 

கல்வி ஒரு சமூகத்தின் உயிர் நாடி, எனவே சமூகம் மாற்றத்துடனான  பிரதேசரீதியாக உள்ள அபிவிருத்திப் பின்னடைவுகளை சீர் செய்ய அப்பிரதேசத்தின் அடிப்படைக் கல்வித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.
கல்வி உரிமை என்பது “அனைத்துச் சமூகங்களினதும் அடிப்படை உரிமையாகும்” எனவே குக்கிராமங்கள் தொடக்கம் நகர்ப்பிரதேச சோிகள் மற்றும் கொட்டில்களில் வாழும் அனைத்துப் பிள்ளைகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். “சமத்துவம்” அற்ற கல்வி முறையை ஒரு பாரிய மோசடி அல்லது துரோகம் என்று கூட குறிப்பிடலாம்.
எனவே கொழும்பின் பிரபல பாடசாலைகளில் கிடைக்கப்படும் வளங்கள் எமது வெலிஓயா சிங்கள பாடசாலைசாலைக்கும், ஓமந்தை தமிழ் பாடசாலைக்கும், முசலி முஸ்லிம் பாடசாலைக்கும் கிடைக்கப் பெறும் வரை நாட்டில் பிரதேசரீதியான அபிவிருத்தி ஏற்றத்தாள்வுகளும், இனரீதியான வேறுபட்ட சிந்தனைப்பாங்கும் காணப்படுவது தவிர்க்க முடியாதது.
உண்மையில் கொழும்பில் உள்ள ஒரு சிறந்த பாடசாலைச் சூழலைஒத்த ஒரு நல்ல பாடசாலைச் சூழல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப் பெற்றால் என்ன? ஆனால், உட்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கப்பெறல், ஆசிரியர்களுக்கான உபகரணங்கள் கிடைப்பனவு மற்றும் பாடத்திட்டங்களில் கூட நாடுபூராகவும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல கிராமிய பாடசாலைகளில் இந்த அடிப்படை விடயங்களில் பாரிய குறைபாடுகள் நிலவுகின்றன.
தலைமைதாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே!
இதன் காரணமாக இன்று கல்வி மிகவும் இலாபகரமான வியாபாரப் பண்டமாக மாறியுள்ளதுடன் சிறந்த பாடசாலைகளுக்கான பாரிய போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளது.எனவே, கிராமியப் பாடசாலைகளுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் மூலம் இந்த நிலை தவிர்க்கப்பட முடியுமாக இருப்பதுடன் நிலையான கல்வி முறையை உறுதி செய்ய முடியும்.
இலங்கை கல்வி முறையின் கீழ் உயர்தர வகுப்புக்களில் கூட பாரிய போட்டித்தன்மையை அவதானிக்க முடியுமாக உள்ளது.  இன்று பகுதி நேர தனியார் வகுப்புக்களின் முக்கியத்தும் பாடசாலைக் கல்வியை விட முதன்மை பெற்றுள்ளமை எமது கல்வி முறைமையின் தேக்க நிலையை எடுத்துக் காட்டுகின்றது.2013 ஆம் ஆண்டின், தேசிய இளைஞர் ஆய்வின் படி, 56% இளைஞர்கள் பகுதி நேர வகுப்புக்களில் பங்கேற்றுள்ளதுடன் இவர்களில் 33% மானோர் பாடசாலை நேரங்களில் கூட இந்த வகுப்புக்களில் பங்கேற்றுள்ளனர். சில ஆசிரியர்கள் கூட மாணவர்களின் பகுதி நேர வகுப்புக்களில் தங்கியுள்ளனர் என்பதும் வெளிப்படையான உண்மை.
பொதுவாகவே எமது கல்விக் கலாசாரத்தில் பல குறைபாடுகள் உள்ளன. பல்கலைக்கழக அனுமதி, அரச பல்கலைக்கழக முறையின் வினைத்திறன், பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெறாக மாணவர்களுக்கு உயிரியல் மற்றும் தொழில் பயிற்சிகளுக்கான கோட்டா வழங்கள் எனும் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட வேண்டும். ஒரே சமயத்தில் இவை அனைத்தையும் அதீர்க்க முடியாது என நான் நம்புகின்றேன். ஒரே சமயத்தில் பல பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பது வினைத்திறன் மிக்க ஒரு முயற்சியுமல்ல.
ஒரு அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற வகையிலும், குறிப்பாக கல்வியை மதிக்கும் ஒரு சமூகமாக நாம் இந்தப் போக்கை மாற்றியமைப்பது இன்றியமையாத விடயமாகும். ஏனெனில் நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கான சமத்துவுமான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும்.
வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்குத் தொியும் ஆரம்ப காலங்களில் முழு இலங்கையினதும் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடியாக இருந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், தொடர்ச்சியான 30 வருட யுத்தத்தின் காரணமாக இன்று ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது. எனவே இப்பிரதேச சமூக மேம்பாட்டின் அடித்தளமாக அனைத்துப் பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.
இங்கு முக்கியமாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் போன்ற விடயங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதுடன், விளையாட்டு மைதானம், விஞ்ஞான ஆய்வு கூடம், வாசிகசாலை வசதிகள், கனணி அறைகள் மற்றும் உபகரணங்கள் உடினடினாக வழங்கப்பட வேண்டும்.

தலைமைதாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே!
பொதுவாக நாடளாவியரீதியான இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் பற்றி  நோக்கின்,
o   அறபு மொழி மற்றும் இஸ்லாம் கற்பிப்பதற்காக நாடளாவியரீதியில் தமிழ் மொழி மூலம் சமார் 500 வெற்றிடங்களும், சிங்கள மொழி மூலம் சுமார் 150 வெற்றிடங்களுமாக மொத்தம் 650 ஆசிரியர்வெற்றிடங்கள் நிலவினாலும், இதற்கு2008 இலிருந்தான 07 வருட காலப்பகுதியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை. எனவே கௌரவ அமைச்சர் அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

o   முஸ்லிம்மாணவிகளின் சீருடையுடன் பர்தா துணிக்கும் பணம் ஒதுக்கியுள்ளமை தொடர்பாக அமைச்சர் அவர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நான் நன்றிகளைத் தொிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில பாடசாலைகள் முஸ்லிம் மாணவிகளுக்கு அந்த பர்தாவையோ அல்லது காட்சட்டையையோ அணிய தடை விதித்துள்ளமை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதுடன், அது அமைச்சின் கட்டளையை அவமதிக்கும் செயலாகவும் உள்ளது. அம்பாந்தோட்டையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மாணவர்களுக்கும் ஆரம்பிக்கப்ட்ட “சுச்சி தேசிய பாடசாலை” முஸ்லிம் பெற்றோர்களின் மனுவை அமைச்சரின் கவனத்துக்கு இந்த சபையில் ஆவனப்படுத்துகிறேன்.
இனநல்லிணக்கத்தைநோக்கிப் பயணிக்கும் நாம் இவற்றைச் சீர் செய்ய அனைத்துப் பாடசாலைகளுக்கும் சுற்றுநிரூபங்கள் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
மும் மொழி அமுலாக்கத் திட்டத்தை வலுப்படுத்த வன்னி உள்ளிட்ட வட கிக்குப் பிரதே தமிழ் மொழிப் பாடசாலைகளில்  சிங்களம் கற்பிப்பதற்கும், சிங்கள மொழிப்பாடசாலைகளில் தழிழ் மொழி கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வியைப் பொருத்த வரையில்,
o   யாழ்பான பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியாவிற்கான தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுத்தல்.
o   பல்கலைக்கழக அனுமதி முறையில் திருத்தங்கள் செய்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாவட்டங்களை விஷேட தரப்படுத்தலின் படி குறிப்பாக அனைத்துத் துறைகளுக்குமான மாணவர் அனுமதியை தற்காலிகமாக அதிகரித்தல்.
o   வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையினை மாணவர்களின் நலன் கருதி தனியான வவுனியா திறந்த பல்கலைக்கழகமாக தரமுயர்த்தி விருத்திசெய்தல்.
o   இலங்கையின் அனைத்து முஸ்லிம் மாணவர்களையும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் புகுத்தி முஸ்லிம் மாணவர்களைத் தனிமைப்படுத்தாது அவர்களது வதிவிடத்தை அண்மித்த கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களுக்கும் வருடாந்தம் நூற்றுக்கும் அதிக மாணவர்கள் அனுமதிக்கப்ட வேண்டும். ஏனெனில் கடந்த வருடம் தென் கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாத்தளை மாவட்டத்தைச் சோ்ந்த 09 மாணவிகள்  தூரம் காரணமாக அதனைக் கைவிட்டு விட்டனர்.
எனும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தலைமைதாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே!
எனவே, நான் வன்னி மக்களுக்குஉறுதியளித்தது போல், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்எனக்கு மாதாந்தம் கிடைக்கும் கொடுப்பனவுகளை  வன்னி மாவட்டத்தின் வறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக தொடர்ந்தும் வழங்கி வருகின்றேன்.
வியைாட்டுத் துறையைப் பொறுத்த வரையில், குறிப்பாக 1948-1960 காலப்பகுதியில் தேசிய கரப்பந்தாட்ட மற்றும் கால்பந்தாட்ட அணிகளில் வடக்கு இளையோர்கள் முக்கிய இடம் வகித்துள்ளனர், இருப்பினும் இன்று நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தேசிய தரத்திலிருந்து மிகவும் தூர விலகிய நிலையில் வன்னி விளையாட்டுத் துறை உள்ளது. இதனைச் சீர்செய்ய வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் நவீன வசதிகளுடனான மாவட்ட விளையாட்டரங்குகள் மற்றும் நீச்சல் தடாகங்கள் அமைக்கப்படுவதுடன், அனைத்துப் பாடசாலைகளினதும் விளையாட்டு வசதிகள் விருத்தி செய்யப்படுவதுடன், சிறந்த பயிற்றுவிப்பாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

வீதி அபிவிருத்தி தொடர்பாக, வடகிழக்கு முதலாம் தர (A Grade) வீதிகள் அபிவிருத்தி செய்யப்பபட்டாலும், சிறிய நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் “B”மற்றும் “C”தர வீதிகள் செப்பனிடப்படாது மிகவும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. மாகாண சபை அதிகாரத்துக்கு உட்பட்ட “B” மற்றும் “C” தர வீதி அபிவிருத்திக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இவற்றைச் சீர் செய்ய போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என அமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.
இறுதியாக,எமது வன்னி வாழ் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் கல்வி மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் பிரதேச அபிவிருத்தியையும், இன நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப எமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என நான் நம்புகிறேன்.
நன்றி!

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com