சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அந்நாட்டுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதி சட்டத்தின்படி கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தவறாக நடந்துகொண்டதன் குற்றச்சாட்டில் அவரை கல்லால் எறிந்து கொல்லும் மரண தண்டனையை நிறைவேற்ற சவூதி அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கு எதிராக மட்டக்களப்பில் உள்ள தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் கோரிக்கையை மீறி குறித்த பெண்ணை சவூதி அரேபிய அரசாங்கம் கொலை செய்யுமாக இருந்தால்இ அதற்கு எதிராக சவூதி அரேபிய நாட்டை புறக்கணிக்கும் போராட்டத்தை நடாத்தப் போவதாக மட்டக்களப்பில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ச்சியாக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைப் பணிப்பெண்களை ஷரிஆ சட்டத்தின் கீழ் மரணதண்டனை விதித்து கொலை செய்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களையோ இலங்கையில் உள்ள மக்களின் உணர்வுகளையோ புரிந்துகொள்ளாது தண்டணை வழங்குவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
சவூதி அரேபிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது இது முதல் தடவையில்லை. ஏற்கனவே ரிசானா என்ற பெண்ணுக்கும் இதேபோன்று மரண தண்டனையை சவூதி அரேபிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
எனவே தொடர்ச்சியாக இலங்கைப் பணிப் பெண்களுக்கு மரணதண்டணை விதித்து கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் தற்போது மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய நாட்டை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே எதிர்வரும் காலங்களில் சவூதி அரேபிய நாட்டுக்கு இலங்கையில் இருந்து யாரும் செல்லக்கூடாது என்பதை வலியறுத்திஇ சவூதி அரேபிய நாட்டுடனான உறவை இலங்கை அரசாங்கம் துண்டித்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்தி சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் துண்டுபிரசுரங்கள் ஊடாகவும் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment