படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் 12,12,2015 சனிக்கிழமை தெரிவித்தார். ஊடக அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் மட்டும் ஊடகவியலாளர்கள் 44 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களை படுகொலைச்செய்த யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த யுகத்தில் படுகொலைச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடுவழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment