வட மாகாணட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் , ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் குறிப்பிட்டுள்ளார்.
கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், விவசாயம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பட்டத்தினை பூர்த்தி செய்தவர்கள் மார்ச் 6ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
மாவட்ட செயலகத்திலும், மாகாண கல்விப் பணிமனையிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment