தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுத்தும் சமத்துவ பொங்கலாக இப் பொங்கல் பொங்கட்டும்
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற வருடம் முழுவதும் தமக்கு உதவிய இயற்கைக்கும் பிராணிகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகின்ற தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழ் மக்கள் வாழ்வில் மறுமலர்சியுடன் சகல வளங்களும் பெற்று சமத்துவம் பொங்கும் பொங்கலாக இப்பொங்கல் அமைய வாழ்த்துகின்றேன் .
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றநம்பிக்கையுடன் தலைமுறை தலைமுறையாக தை திருநாளை கொண்டாடிவரும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறுகின்ற ஆண்டாக இவ் ஆண்டு
அமையவேண்டுவதுடன் எமதுமக்களின் உள்ளங்களின் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கமாக இருக்கின்ற அரசியல் கைதிகளின் விடுதலை காணமல் போனவர்கள் தொடர்பான முடிவுகள் கைக்கெட்டுகின்ற பொங்கலாக இப் பொங்கல் அமைய வேண்டும்.
இன்றுமுதல் பெருபான்மையினர் சிறுபான்மையினரை புறம் தள்ளுவதும் சிறுபான்மையினர் தமுக்குள் இருக்கின்ற சமய, சாதிய ,அரசியல் ரீதியிலான சிறுபான்மையினரை புறக்கணிக்கின்றதுமான நிலை மாறி இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது எனும் உணர்வுடன் அச்ச உணர்வுகள் நீங்கி இங்கு வாழ்கின்ற ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் அனைத்து இனங்களும் அனைத்து சமூகத்தினரும் அனுபவிக்கும் வகையிலான சமத்துவ நிலை உருவாக வேண்டி இப் பொங்கலை சமத்துவ பொங்கலாக அனைவரும் அனுஷ்டிப்போம் .
நன்றி
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ
About the Author
unmainews.com
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
0 comments:
Post a Comment