சிங்கள நாட்டில் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு சட்டங்களை இயற்ற அனுமதிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளின் ஒழுக்கங்களை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் அண்மையில் நாடாளுமன்றில் உத்தேச சட்டமொன்றை சமர்ப்பித்திருந்தது.
இந்த உத்தேச சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில், எனக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு வரும் எந்தவொரு வழக்கு விசாரணைகளுக்காகவும் நீதிமன்றிற்கு செல்லப் போவதில்லை.
நூறு சிறைச்சாலைகளில் போட்டாலும், பொலிஸின் எந்தவொரு தரத்திலான அதிகாரி வந்தாலும் வழக்குகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை.
நாட்டில் பௌத்த பிக்குகளுக்கான நீதிமன்றம் உருவாக்கப்பட்டதன் பின்னரே நான் நீதிமன்றில் முன்னிலையாகுவேன்.
இவ்வாறான சட்டமொன்றை கொண்டு வர வேண்டுமாயின் பௌத்த பிக்குகளுக்கு சட்டங்களை பிறப்பிக்காது, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரேவிதமான சட்டமொன்றை அரசாங்கம் கொண்டு வந்திருக்க வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை போதி பௌத்த நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment