எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் 09/03 ஆஜர்செய்யப்பட்டிருந்தனர்.
அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து எவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத காரணத்தினால் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை நீதவான் ஒத்துவைத்தார்.
அத்துடன் அடுத்த வழக்கு தினத்தன்று சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து பிரதிநிதிகளை ஆஜராகுமாறும் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல அழைப்பாணை விடுத்தார்.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 16 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கைதியொருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்
0 comments:
Post a Comment