சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 17 பேர் காலி கடற்பரப்பில் கடற்படையினரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண்கள், 2 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இம்மாதம் முதலாம் திகதி நீர்கொழும்பில் இருந்து படகு மூலமான பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 17 பேரும் நேற்று (05) கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment