கிரேக்கத்தில் புலம் பெயர்ந்தவர்களின் முகாமில் 7 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை தட்டிக்கேட்ட சிரியா அகதிகள் இருவரை அங்கிருந்த அனைவரும் பாராட்டியுள்ளனர்.
கிரேகத்தில் அமைந்துள்ளது Idimeni புலம் பெயர்ந்தவர்களின் குடியிருப்பு முகாம், இந்த முகாமில் தான் ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.
சம்பவத்தின்போது அந்த சிறுமி தனியாக கழிவறை நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இதை கவனித்துக்கொண்டிருந்த ஆப்கான் அகதி ஒருவர் அந்த சிறுமியை தொடர்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் தங்களை எவரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அந்த ஆப்கான் இளைஞர், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று ஆடை களைய முயன்றுள்ளார்.
இதில் பயந்துபோன அந்த சிறுமி உடனே வாய்விட்டு அலறியாதாகவும், அந்த சத்தம் கேட்டு அருகாமையில் இருந்த மக்கள் அனைவரும் அங்கு கூடியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற அந்த ஆப்கான் இளைஞன் அங்கிருந்து தப்ப முயன்றபோது சிரியா அகதிகள் இருவர் சமயோசிதமாக செயல்பட்டு அந்த இளைஞனை பிடிகூடியுள்ளனர்.
இச்சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த கூட்டம் அந்த இளைஞனை சரமாரியாக தாக்கிவிட்டு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் கூடிய அகதிகள் கூட்டம் அந்த இளைஞனை கொலை செய்துவிடும்படி முழங்கியதாக கூறப்படுகிறது,
ஆனால் இளைஞனை பொலிசில் ஒப்படைத்த சிரியா அகதிகள் இருவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment