மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியின் அனுசரனையுடன் மலையக மகளிர் முன்னணியின் சர்வதேச மகளிர் தினம் எதிர்வரும் 20.03.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இராஜாங்க கல்வி அமைச்சரும், மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவருமான கௌரவ வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களும் விசேட விருந்தினர்களும் உரையாற்றவுள்ளார்கள்.
இந்த நிகழ்வு சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வாகவோ அல்லது கொண்டாட்ட நிகழ்வாகவோ அல்லாது, பொருந்தோட்டத்துறை சார்ந்த பெண்களும் மலையக சமூகத்தின் அனைத்துமட்ட பெண்களினதும் உரிமைக்கான அழுத்தத்தினை தேசிய மட்டத்தில் அனைவருக்கும் வழியுறுத்தும் நிகழ்வாக அமையும்.
முழுநாட்டினதும் தேசிய வருமானத்திற்கும் தங்களை முழுமையாக அர்பணித்து தமது இருண்ட வாழ்விற்கு விடிவைத் தேடிக் கொண்டிருக்கும் பெருந்தோட்டத்துறை பெண்களின் பிரச்சினைகள் இன்னும் தேசிய மட்டத்தில் கூட சரியாக அடையாளம் காணப்படவில்லை என்பது கவலையான உண்மை, இந்த நிகழ்வு முழு மலையகம் சார்ந்த பெண்களினதும் எதிர்பார்ப்புகள் சம்பந்தமாக உறுதியான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு நிகழ்வாக அமையும்
அன்றைய தினத்தில் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் ஒன்றும் நடைபெறும்’
0 comments:
Post a Comment