வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ், நீண்டகாலமாக உள்ள பூங்கா வீதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலை மார்ச் 31 ஆம் திகதி விடுவிக்கப்படும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது காலபோக நெற்செய்கை நெல் கொள்வனவு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலைகள் போதாத நிலை காணப்படுகின்றது.
இதனால் இக் களஞ்சியசாலையை விடுவிக்குமாறு கடந்த வருடத்தில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையை அடுத்து எதிர்வரும் மார்ச் 31 இக் களஞ்சியசாலை கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அப்பகுதியில் நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் மடுக்கந்தைப் பகுதிக்கு செல்லவுள்ளனர்.
இதேவேளை, குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியிலேயே வவுனியாவின் பிரதான நெற்களஞ்சியசாலை மற்றும் பிரதான அலுவலக கட்டிடம் என்பன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment