மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தளத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற மஹா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் இடம் பெற்று வருகின்ற போதும் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரும் பக்தர்களின் நலன் கருதி பூசை வழிபாடுகள் அனைத்தும் திருவுருவங்கள் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இடம் பெற்றது.
அபிசேகம், அர்ச்சனை நிகழ்வுகளும் அலங்கார மண்டப சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு விசேட பூசை வழிபாடுகளும் இடம் பெற்றது.
இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் தற்போது இடம் பெற்று வருகின்ற போதும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரும் பக்தர்களின் நலன் கருதி பூசை வழிபாடுகள் அனைத்தும் திருவுருவங்கள் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் இடம் பெற்றது.இந்த நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பொலிஸ் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பான முறையில் மஹா சிவராத்திரி அனுஸ்ரிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment