வவுனியாவில் இன்று காலை பாரியளவான ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்துத் தடைப்பட்டதுடன் வாகனப் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது பெரும் திரளான பொது மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
போகஸ்வலாவே பகுதியிலுள்ள தமது 32கிலோ மீற்றர் தூரமான வீதியை செப்பனிடுமாறு கோரியே அப்பகுதி மக்கள் இன்று காலை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அத்துடன் நோயாளரை வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த நோயாளர் காவு வண்டியை செல்லவிடாது வழிமறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment