தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள முக்குளம் அரசுத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் சந்திரசேகரன் (வயது-54). இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அவரைப் பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில், காரிமங்கலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் சந்திரசேகரனை கைது செய்துள்ளனர்
0 comments:
Post a Comment