பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கபுதிய பொறிமுறையொன்றை தயாரிக்க குழுவொன்றை நியமித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. மூன்று பேரை உள்ளடக்கிய குறித்த குழு எதிர்வரும் 6 வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தற்போது காணப்படும் முறைமை முறையற்றது என்பதால் புதிய முறையொன்றை முன்னெடுக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அவர் கூறினார். இதற்கு அமைவாக பொலிஸ் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் பலவற்றுடன் பொலிஸ் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
முறையற்ற பொறிமுறையின் கீழ் பதவி உயர்வு வழங்கப்படுவதால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனடிப்படையில் பொலிஸ் திணைக்களம் ,பொலிஸ் அதிகாரிகளின் சங்கம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஆகியவற்றின் கருத்துக்களை கேட்டறிந்ததன் பின்னர் பதவி உயர்வு தொடர்பில் பொறிமுறையொன்றை தயாரிக்கவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
0 comments:
Post a Comment