இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்காக, அவர்களுக்கு கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படுவதாக நியுயோர்க் டைம்ஸ் இதழ் நடத்தியுள்ள புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்களை ஆயுததாரிகள் கைமாற்றிக்கொள்வதற்கு வசதியாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இராக்கில், ஐஎஸ் ஆயுதக்குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்துள்ள யாஸீதி பெண்களில் 35க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
வாய்வழி மற்றும் ஊசி மூலம் கொடுக்கப்படும் கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படுவதாக அந்தப் பெண்கள் கூறுகின்றனர்.
பெண் ஒருவரை கருக்கலைப்பு செய்யுமாறு பலவந்தப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் குறைந்தது ஒருதடவையாவது நடந்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸின் புலனாய்வு கூறுகின்றது.
யாஸீதி இனப் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதையும் அவர்களை திட்டமிட்ட வகையில் அடிமைகளாக வைத்திருப்பதையும் ஐஎஸ் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளது.
அடிமை ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கமுடியும், ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்ற இஸ்லாமிய பொருள் விளக்கம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே கருத்தடை மருந்துகளை ஐஎஸ் பயன்படுத்துவதாக நம்பப்படுகின்றது.
thanks bbc
0 comments:
Post a Comment