வவுனியா பிரஜைகள் குழு நிர்வாகத்தினர் இன்று மாலை 2.30 மணியளவில் குருமன்காடு கடை கட்டிடத்தொகுதி யொன்றில் இரகசிய கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இம்மாதம் 12ம் திகதி வன்னியின் கோட்டலில் நடைபெற்ற பிரஜைகள் குழு கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூகஆர்வலர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் கிராமமட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் இன்றய கூட்டத்திற்கு எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லையென பொதுஅமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளர்
புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக இரண்டு கோடி ரூபா நிதி வழங்க உள்ளதாகவும் குறித்த நிதியை கையாளுவது தொடர்பாக திட்டமிடுதல் சம்மந்தமான கூட்டமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
அதனை தொடர்ந்து எமதுசெய்தியாளர் பிரஜைகள் குழு தலைவரை வினவியபோது
இவ்வாறு கூட்டம் நடைபெற்றது உண்மைதான் கூட்டம் ஆரம்பித்து ஒரு மணிநேரத்தில் தன்னை வெளிநடப்பு செய்ததாகவும் அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார்
0 comments:
Post a Comment