விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் பிரதியமைச்சராக இருந்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தொடர்பு கொண்டு உண்மையை அறிந்து கொள்வதற்காக அவருடன் பல தடவைகள் முயற்சித்தபோதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது கைத்தொலைபேசி அலறும் மணியோசை வருகின்ற போதும் பதில் அளிக்கவில்லையென அரச நாளிதழொன்று கவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் கருணா அம்மானின் பெயர் அடிபடுவதாலும், பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுவதாலும் அவர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் எனச் சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில் அவை தொடர்பாகவும் அவரிடம் கேட்டறிந்து கொள்ள முயற்சித்தபோதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
பொதுவாக செய்தி தொடர்பாக அவருடன் அழைப்பை ஏற்படுத்தினால் உடனடியாகவே பதிலளிக்கும் அவர் நாட்டு நடப்புகள் பற்றியும் நீண்ட நேரம் கலந்துரையாடுவார்.
ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அவரைத் தொடர்பு கொள்ள முடியாதிருப்பது மர்மமாகவே உள்ளதாகவும் குறித்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment