மன்னார் – மடு பிரதேசத்தில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பூமலர்ந்தான் கிராமத்தைசேர்ந்த கே.அபிஸ்டன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சடலம் மன்னார் பொதுவைத்தியாலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment