ஹிக்கடுவை -கலுபே பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒரு பெண்ணும் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலம் தொடர்பான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த 38 வயதான பெண்ணும்,மற்றுமொரு ஆணும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளங் காணபட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இராணுவத்தில் பணி புரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment