நுகர்வோர் பாதுகாப்பை உறுத்திப்படுத்தும் முகமாக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தினம் இன்று வவுனியாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசனைக்கு அமைய தேசிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல்வேறு வர்த்தக நிலையங்கள் மற்றும் உள்ளுர் உற்பத்தியாளர்களும் தமது பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன் விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சா ரிசாட் பதியுர்தீன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ. ஜெயதிலக, ரிப்கான் பதியுர்தீன், தர்மபால செனவிரத்தின உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்
0 comments:
Post a Comment