இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட இன ரீதியான முறுகலை அடுத்து விரிவுரைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு திங்கள் மாலை 6 மணி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவத்துறையை சேர்ந்த தமிழ் மாணவர்களுக்கும் வர்த்தக துறையை சேர்ந்த சிங்கள மாணவர்களுக்கும் இடையே சில நாட்களாக முறுகல் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 9 தமிழ் மாணவர்கள் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரைகளை நடத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதால் மறு அறிவுறுத்தல் வரை விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சம்பவம் நடந்து 3 நாட்கள் கடந்துள்ள போதிலும், இது தொடர்பில் பல்கலைக்கழகம் மற்றும் காவல்துறை ஆகியன நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment