தகவலறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தகவல் அறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் வாக்குறுதி வழங்கப்பட்டதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
விசேடமாக சிவில் அமைப்புகள் ,பொது மக்கள் என அனைவரும் தகவலறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு பெரிதும் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லதொழிக்கவும், நல்லாட்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற சட்டமூலமாகவும், தகவல் அறியும் சட்டமூலம் காணப்படுவதாகவும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment