அம்பாறை - அக்கரைப்பற்று 9ஆம் பிரிவிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்.
இளம் பெண் சட்டத்தரணியான 27 வயதுடைய லோ.நிதர்சினி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment