கிளிநொச்சியில் பாடசாலை அதிபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பன்னங்கண்டி இலங்கைத் தமிழ்க்கலவன் பாடசாலை அதிபரால் அதே பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று பெற்றோர் மற்றும் மாணவர்களால் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சந்தேகத்தின்பேரில் பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்இ பாதிக்கப்பட்ட மாணவியும் பொலிஸாரால் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளார்
0 comments:
Post a Comment