‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இப்படங்கள் அனைத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படங்களில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கே.வி.ஆனந்த் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரீஸ் ஜெயராஜ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே தயாரித்த ‘தனி ஒருவன்’ படத்திற்கு ஆதி இசையமைத்திருந்தார். இப்பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதன் காரணமாக ஹிப் ஹாப் தமிழா ஆதியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment