ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச பாதுகாப்பு நிலைமைகள், போர் மோதல்கள் தொடர்பில் ஆய்வு நடத்தும் அமெரிக்க நிறுவனமான சர்வதேச யுத்த ஆய்வு நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இலங்கையும் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டிருந்த வரைபடத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் இலங்கையர்களை அழைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களின் ஊடாக இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்பு பேணி தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள அந்த அமைப்பு முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஈராக், பலஸ்தீனம், சிரியா, இஸ்ரேல், லெபனான், அமெரிக்கா, கனடா, சவூதி அரேபியா, ஈரான், சீனா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை தமது இலக்காக தீவிரவாத அமைப்பு பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment