பிரசல்ஸ் குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை வெளியிடுவதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரசல்ஸ் வாழ் இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment