வவுனியாவில் இராணுவத்தினருக்கு குடியிருப்பு வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் இன்று வியாழக்கிழமை (24) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தம்முடன் முன்னரே கலந்தாலோசிக்கவில்லை என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளின் நியாயத்தன்மையைக் கருத்திற்கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே சபை மண்டபத்தில் உறுப்பினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்
0 comments:
Post a Comment