ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு இன்று காலை கிழக்கில் பாலமுனையில் நடைபெறவுள்ளதுடன் மாநாட்டில் சிறப்பு அதிதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் சரத் பொன்சேகா உட்பட பெருமளவு அரசியல் தலைவர்கள் இம் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களுக்கு இம் மாநாட்டிற்கான சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சிறப்பு அதிதிகளான ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலாசார அம்சங்களுடன் வரவேற்கப்படவுள்ளனர்.
அட்டாளைச்சேனை பொதுவிளையாட்டு மைதானத்திலிருந்து அவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளது. மேற்படி மாநாட்டின் சிறப்பு அம்சமாக அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஆதிவாசிகளின் விசேட கலாசார அம்சம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment