வீரகுல, வல்கம்முல்ல பிரதேசத்தில் 21 வயதுடைய பேச முடியாத ஊமை யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 07ம் திகதி குறித்த யுவதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வீரகுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது யுவதியின் காதில் இருந்த தங்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளன.
குறித்த யுவதி தற்சமயம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவர் (12/03/2016) கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
0 comments:
Post a Comment