முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற, நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்கின் ஆரம்ப கட்ட சாட்சி விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தெரியவருவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும் கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment