வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் பயணித்தக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கோவில்குளம் பகுதியிலிருக்கும் எரிபொருள் நிலையத்தில் இன்று மதியம் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் ராணி மில் வீதிக்கு திரும்ப முற்பட்டபோது முச்சக்கரவண்டி குடைசாய்ந்து தீப்பற்றியது. எனினும் இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் எற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment