யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாவகச்சேரி மறவன்புலோவில்
இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மறவன்புலோ கிழக்குப் பிரதேசத்தில் வசித்து வரும் ரவீந்திரன் நிலோஜினி என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்று கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் தோற்றியிருந்தார். அதில், குறித்த மாணவி ஏ,சி,5எஸ் பெறுபேற்றைப் பெற்றிருந்ததாகவும் அதனால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment