வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சுகாதாரஊழியர்கள் ,சாரதிகள் ,மற்றும் சிற்றூழியர்களின் பிள்ளைகள் 35 பேருக்கு ஸ்கொட்லாந்து வாழ் கமல சீலன் அவர்களின் அனுசரணையில் தமிழ் விருட்சத்தால் கற்றல் உபகரணங்கள் 13.03.2016 அன்று நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது .
இந்த நிகழ்வில் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் திரு சு.கிருஷ்ணராஜன் ,தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் அகில இலங்கை பொது ஊழிய சங்க தலைவரும் ஏற்பாட்டாளருமான தே.நாகராசா,முன்னாள் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் க.தர்மலிங்கம் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் சுகாதாரஊழியர்கள் ,சாரதிகள் ,மற்றும் சிற்றூழியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் முதலில் உரையாற்றிய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் க.தர்மலிங்கம் அவர்கள் பின் தங்கிய மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் தமிழ் விருட்சமும் ,அதன் தலைவரும் தொடர்ந்து பாடு பட்டு வருவது பாராடுதளுக்குரியது என்றும் இந்த முயற்சியும் ,சேவையும் தொடர வேண்டும் என்றும் கேட்டு கொண்டார் .
அடுத்து நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் திரு சு.கிருஷ்ணராஜன் அவர்கள் தனதுரையில் மாணவ செல்வங்களே கற்றல் செயற்பாடுகளில் இப்போது எமது மாணவர்கள் சாதிக்க தொடக்கி உள்ளார்கள், அவர்களுக்கு இது போன்று கற்றல் உபகரணங்களை வழங்கி அதற்கு சக்தி அளிக்கும் செயற்பாட்டை தமிழ் விருட்சம் செய்வது பாராடுதளுக்குறியது என்றும் அந்த முயற்சிக்கு கை கொடுத்த கமலசீலனுக்கும் நன்றிகள் என்றார் .
அடுத்து உரையாற்றிய தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )அவர்கள் அரச ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு உதவிகள் கிடைப்பது அரிது ,ஆனாலும் அவர்கள் படும் கஷ்டத்தை நான் அறிவேன் ,அதனால் தான் இந்த கற்றல் உபகரணங்களை அகில இலங்கை பொது ஊழிய சங்க தலைவர் .நாகராசா அண்ணா கேட்டு கொண்டதுக்கு இணங்க வழங்கி உள்ளேன் .இது ஆரம்ப முயற்சி இந்த பணி தொடரும் என்றார் .அத்துடன் கமலசீலனுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் .
அடுத்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் அகில இலங்கை பொது ஊழிய சங்க தலைவரும் ஏற்பாட்டாளருமான தே.நாகராசா அவர்கள் மாற்றம் அடைந்து வரும் கல்வி நடவடிக்கைகளால் எமது சம்பளம் எமது பிள்ளைகளுக்கும் ,எமது வாழ்க்கைக்கும் ஈடுகொடுக்க முடியாது உள்ள நிலையில் தமிழ் விருட்சம் அமைப்பிடம் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று கற்றல் உபகரணங்கள் வழங்கி ஓரளவேனும் எம் சுமையை குறைதமைக்கு தமிழ் விருட்சத்துக்கும் ,வழங்கிய முகம் தெரியாத கமலசீலனுக்கும் நன்றிகள் என்றார் .
அடுத்து உரையாற்றிய மாணிக்கம் ஜெகன் அவர்கள் தமிழ் விருட்சம் கற்றல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவதாகவும் ,அதற்காக மிகுந்த சிரமபட்டு செயற்படுவதாகவும் நீங்கள் 100 புள்ளிகள் எடுக்க இந்த கற்றல் உபகரணங்கள் வழங்குவது ஆரம்ப படி எனவும் எனவே நீங்கள் நன்றாக கற்று நல்ல பிள்ளைகளாக வர வேண்டும் என்று கேட்டு கொண்டார் .
அடுத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன .
அடுத்து ஊழியர் இ.ராம்குமார் தனது நன்றி உரையில் எமது கஷ்ட ,துன்பங்களை அறிந்து எமது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சத்துக்கும் ,கமலசீலனுக்கும் நன்றிகள் என்றார் .எமக்கான உதவிகள் தொடர வேண்டும் என்றும் கேட்டு கொண்டார் .அவரது நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது .
0 comments:
Post a Comment