இரத்தினபுரி மாவட்டம் மாகம தெம்புவன பிரதேசத்தில் 7 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியும், சந்தேக நபரான இளைஞனும் ஒரே இடத்தில் அயல் வீடுகளில் வசித்து வருபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி, சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றிருந்த போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தெம்புவன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment