குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 100 நாட்களுக்கு மேல் குமார் குணரத்தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment