சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும்நோக்கிலே படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவ நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தா்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.சுமார் 212 நாட்கள் இந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எக்நெலிகொட கடத்தல் காணாமல் போனதல் விவகாரத்தில் படையினர் மீது குற்றம் சுமத்த எவ்வித சாட்சியங்களும் கிடையாது என குறிப்பிட்ட அவர், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலே படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தற்கொலை தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் புலனாய்வு தகவல்களை திரட்டிய சம்மி குமார என்ற இராணுவ உத்தியோகத்தரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச இந்தக் கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதாக வாக்கு மூலம் ஒன்றை அளிக்குமாறு தம்மை அச்சுறுத்துவதாக படைவீரர் ஒருவர் தம்மிடம் கூறியதாகவும் பெங்கமுவ நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment