வவுனியாவில் பல குடும்பங்கள் தங்களுக்கான இருப்பிடங்களை அமைத்துக்கொள்ளும் அளவிற்குகூட நிலமின்றி அலையும் நிலையில் சில அரச அதிகாரிகளும் அவர்களது பினாமிகளும் தங்களுக்கிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி பல ஏக்கர் கணக்கில் காணிகளை அபகரித்துவருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அன்மையில் எமது செய்தியாளர்குழு காணிப்பிணக்குகள் தொடர்பிலான ஆவணமொன்றினை தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிக்க வவுனியாவில் A9 வீதியை அண்மித்த கிராமம் ஒன்றிற்கு சென்றபோது அக்கிராமத்தில் அப்பிரிவிற்குட்பட்ட காணி உத்தியோகத்தர் பல ஏக்கர் காணியை அபகரித்து உழுந்து செய்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்தது அதேகிராமத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையில் உள்ள போரினால் தனது மகன்களை இழந்த தாயின் காணிப்பிணக்கை தீர்த்துவைக்காமல் இழுத்தடிக்கும் இவ் உத்தியோகத்தர் தனக்கான காணியை பிடித்து வேலியடைத்து பராமரிப்பது வேலியே பயிரைமேயும் செயற்பாடாகும். என்னும் சில நாட்களில் எமது செய்திப்பிரிவால் தயாரிக்கப்படும் ஆவணத்தில் வவுனியாவில் எந்தெந்த அதிகாரிகளுக்கு எங்கு? எவளவு ?காணிகள் உள்ளன என்னும் விபரங்கள் வெளியிடப்படும்.
0 comments:
Post a Comment